354 ஏக்கர் காணியை அரசு சுவீகரிக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும்: சித்தார்த்தன் கோரிக்கை
அராலி தொடக்கம் பொன்னாலைக்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 354 ஏக்கர் காணியை அரசு சுவீகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் நேற்று (02.12.2023) நாடாளுமன்றில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி! சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆதங்கம் (Photos)
வன வளங்கள் பாதுகாப்பு
”சங்கானைப் பிரதேச செயலகத்திலே அராலி தொடக்கம் பொன்னாலை வரை, ஏறக்குறை பத்து கிலோமீற்றர் அங்கு என்ன நடக்கின்றது என்றால், வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், அவர்கள் வன ஜீவராசிகள் என்பதை விட்டுவிட்டு வன வளங்கள் பாதுகாப்பு என அந்த இடங்களுக்கு ஏற்றவாறு பெயர்களை மாற்றி அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பார்க்கின்றார்கள்.
ஏறக்குறைய 354 ஏக்கர். 07 மயானங்கள், விளையாட்டுத் திடல்கள், தனியார் காணிகள் எல்லாமே அதற்குள் அடங்குகின்றது.
இதுபற்றி அரச அதிபர் சங்கானை பிரதேச செயலாளரைக் கேட்டிருக்கின்றார், பொதுமக்களையும் பொது அமைப்புக்களையும் அழைத்து இது சம்பந்தமான அவர்களுடைய அபிப்பிராங்களை எடுக்கும்படி. அங்கு சென்ற எல்லோருமே அதை செய்யக்கூடாது என்றே சொல்லியிருக்கின்றார்கள்.
தமிழ் மக்கள்
ஏனென்றால் பின்பு அப்பகுதி கடலில் தொழிலுக்குச் செல்பவர்கள் அங்கு செல்ல முடியாமல் போகும், அந்த மயானங்களை பாவிக்க முடியாமல் போகும் ஏனென்றால் வன வளங்கள் பாதுகாப்பு என்று அவர்கள் விட மாட்டார்கள்.
இது மாத்திரமல்ல, ஜனாதிபதி சொல்லியிருக்கிறார், அமைச்சர் அவர்கள் சொன்னார்கள், 85ஆம் அண்டுக்கு முந்திய நிலைமைக்குத் தான் கொண்டுசெல்லப் போகின்றோம் என்று, ஆனாலும் அங்கு இந்த விடயம் நடந்து கொண்டிருக்கிறது.
அவற்றை வனஜீவராசிகள் பாதுகாப்பு வலயமாக எடுப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றது. நிச்சயமாக இவைகள் எல்லாம் நிற்பாட்டப்பட வேண்டும்.
ஏனென்றால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் நம்பிக்கையை உருவாக்க வேண்டியது உங்களுடைய கடமை. எனவே அதை கட்டாயமாக செய்ய வேண்டுமென்று கேட்டு கொள்ளுகின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
