பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்! எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்து
சிங்கள பௌத்தர்களை பொறுத்த வரை ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்னர் நீ யாரோ நான் யாரோ என்றே செயற்பட்டிருக்கின்றார்கள். ஆகவே ஈழத் தமிழர்களுடைய உரிமைகளை நிலை நாட்டுவதற்கான கோரிக்கைகளை எங்களுடைய தமிழ்த் தேசிய அணிகள் முன்வைக்க மக்கள் வலியுறுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து சமகால நிலைமை தொடர்பாக கருத்து தெரிவித்த போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ஈழத் தமிழர்களுடைய உரிமைகளை நிலை நாட்டுவதற்கான கோரிக்கைகளை எங்களுடைய தமிழ்த் தேசிய அணிகள் முன்வைக்க மக்கள் வலியுறுத்த வேண்டும். இதற்கு ஆதரவாக புலம்பெயர் தமிழர்களும் தமிழக மக்களும் தாயகத்தில் உள்ளவர்களும் கோரிக்கை வைக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டும். இந்த உடன்படிக்கையின்படி அந்த நாட்டில் படுகொலைகள் இடம்பெறுமாக இருந்தால் படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும்.
நான் அதிலே கையெழுத்திடாத காரணத்தால் தான் இந்த முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலைக்கு நாங்கள் செல்லாமல் தப்பினோம் என இன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறி இருக்கிறார்.
சிங்கள கிறிஸ்தவர்களாக இருக்கட்டும் இஸ்லாமிய மக்களாக இருக்கட்டும், ஈழத் தமிழர்களாக இருக்கட்டும் யார் மீதும் படுகொலைகள் ஏற்படாமல் இருக்க அவ்வாறான உடன்படிக்கையில் கையெழுத்திடவேண்டும்.
இரண்டாவதாக பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடை சட்டத்தை பாவித்து தான் தமிழ் மக்கள் மீதும் முஸ்லிம் மக்கள் மீதும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தினார்கள்.
வடக்கு கிழக்கிலே போராட்டம் நடந்திருந்தால் அதை ராணுவம் செய்யாண்ட விதமும் தெற்கிலே நடக்கின்ற விதமும் வேறு விதமாகவே காணப்படும் எங்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாய்ந்து துப்பாக்கியில் கண்ணாய் கண்ணீர் புகை கொண்டு வராங்கிகளும் அடிக்கக்கூடிய நிலைமை ஆபத்துகள் காணப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் இடைக்கால அரசாங்கம்
உங்களுக்கு எவ்வாறு இடைக்கால அரசாங்கம் சர்வகட்சி அரசாங்கம் வருகின்றதோ அதேபோல இணைந்த வடக்கு கிழக்கிலே இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம். தமிழர்களுக்கு ஒரு பாரம்பரிய தாயகம் இருக்கின்றது. தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை தீர்மானிப்பர்.
ஒரே நாட்டுக்குள் வாழ்வதா இல்லையா என பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். முக்கியமான மூன்று கோரிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச சமூகத்திடமும் சர்வதேச நிறுவனங்களிடமும் நாடுகளிடமும் முன்வைத்து வலியுறுத்தி செயல்பட வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளை இடைக்கால அரசாங்கத்திடம் சமர்ப்பித்து தமிழர்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டுமே ஒழிய வேறு ஏதும் காரணமாகவும் ஆதரவு வழங்குவார்களாக இருந்தால் நாங்கள் மிகப்பெரிய வரலாற்றை தவறை விடுகின்றனர் என்பதே அர்த்தமாகும்.
சிங்கள பௌத்தர்களை பொறுத்த வரை ஆறு கிடைக்கும் வரை அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்னர் நீ யாரோ நான் யாரோ என்றே செயற்பட்டிருக்கின்றார்கள்.
ஆகவே அதனை மனதில்
கொண்டு நம்ப நட நம்பி நடவாதே என்ற வகையில் செயல்பட வேண்டும் என்பதை எனது
பணிவான வேண்டுகோள் என்றும் தெரிவித்துள்ளார்.