தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான பதிவுகளுக்கான தடையை மீண்டும் நீடித்தது முகநூல் நிறுவனம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான பதிவுகளை இடுவதற்கு முகப்புத்தக நிறுவனம் இவ்வருடமும் தடை விதித்துள்ளது.
அத்துடன் இலங்கையைச் சேர்ந்த பொதுபல சேனா மற்றும் சிங்ஹலே ஆகிய அமைப்புக்கள் தொடர்பான பதிவுகளுக்கும் குறித்த நிறுவனம் தடை விதித்துள்ளது.
இதேவேளை, பொது பல சேனா அமைப்பினைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் எந்தவொரு பதிவையும் முகப்புத்தகத்தில் இடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா மற்றும் சிங்ஹலே ஆகிய அமைப்புக்களுக்கும் சமூகத்தில் பல்வேறு பிரிவினருக்கு மத்தியில் வெறுப்புப் பேச்சுகளை கொண்டுசெல்லுதல் மற்றும் சமூகங்களுக்கு இடையில் பிரச்சினை கருத்துக்களை பகிர்தல் என்றதன் அடிப்படையில் முகப்புத்தக நிறுவனம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri