பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள 28வது ஆண்டு தமிழர் திருயாத்திரை!
நெதர்லாந்து தமிழர் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் ஏற்பாடு செய்யும் 28வது ஆண்டு தமிழர் திருயாத்திரை, இறை அருளால் மே 9ஆம் திகதி (சனிக்கிழமை) பெல்ஜியத்தில் நடைபெறவுள்ளது.
இந்த திருயாத்திரை, Sanctuaire de Banneux பகுதியில் உள்ள அன்னை மரியாளின் புனித நீரூற்றை நோக்கி நடைபெறுகிறது.
மருதமடு அன்னை பக்தியுடன் தொடர்புடைய இந்த ஆன்மீக நிகழ்வில், உலகம் முழுவதும் உள்ள தமிழர் கத்தோலிக்கர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வானது Rue de l’Esplanade 57, 4141 Banneux (Sprimont), Belgium என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது.
நிகழ்ச்சி நிரல்
காலை 10.00 மணி குணமாக்கும் நற்கருணை ஆராதனை
வழிநடத்துபவர்: அருட்பணி போல் றொபின்சன் அடிகளார் (திருமலை மறைமாவட்ட குருமுதல்வர்)

மதியம் 12.30 மணி மெழுகுதிரி பவனி அன்னையின் புனித நீரூற்றை நோக்கிய பக்திபூர்வமான ஊர்வலம்
மாலை 3.30 மணி மருதமடு அன்னை சிற்றாலயம் அர்ச்சிப்பு மற்றும் திருநாள் திருப்பலி தலைமை: அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் (யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்)
இந்த திருயாத்திரையில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு அன்னை மரியாளின் ஆசீர்வாதத்தைப் பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
தொடர்புகளுக்கு
Rev. Fr. Joe: +31 6 58999090அன்ரன்: +31 642859690 மேரிஜெராட்: +31 6 26860228 சேவியர்: +31 6 21126150 திகால்: +31 6 16437559 விஜயா: +31 6 29168558

நெதர்லாந்து தமிழர் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் இந்த ஆன்மீக நிகழ்வை சிறப்பாக நடத்தத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.

முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan