22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் சாத்தியக்கூறுகள் குறைவு:வெளியான தகவல்
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 22ஆவது திருத்தவரைவு அக்டோபர் 22 அன்று விவாதிக்கப்பட்டாலும், அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்று அரசாங்கத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்க கட்சிகளின் இணக்கமின்மை
இந்த திருத்தவரைவு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளின் தேவையின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.
இதனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்யும் அரசாங்கத்தின் உறுதிமொழி இப்போதைக்கு நிறைவேறாது. எனவே நாட்டின் அராஜக அரசியல் தொடரவே போகின்றது.
முதலில் இந்த வாரம் 22 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று பட்டியலிடப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என உறுதியளித்த நிலையிலேயே இந்த தயார் நிலை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் அரசாங்க கட்சியின் மத்தியில் ஏற்பட்ட இணக்கமின்மை காரணமாக விவாதம் இடம்பெறவில்லை.
விவாதம் ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணம்
இரட்டை பிரஜாவுரிமைகளை கொண்டவர்கள், ஜனாதிபதிகளாக வரலாம் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ள பசில் ராஜபக்சவின் செயற்பாடுகளே இந்த விவாதம் இடம்பெறாமைக்கான காரணம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் 22வது திருத்தத்திற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
இதேவேளை சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற தனிப்பெரும்பான்மை போதுமானது என நாடாளுமன்ற அதிகாரிகள் விளக்கமளித்ததாக எதிர்கட்சி குறிப்பிட்டது.
எனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று சட்டமா அதிபர் கூறியதாக
எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கிரில்ல தெளிவுபடுத்தினார்.
இதுவே விவாதம் ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
