தையிட்டியில் நிறைவுபெற்ற போராட்டம்: பொலிஸார்-போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதம் (Video)

Sri Lanka Police Jaffna SL Protest Northern Province of Sri Lanka Selvarajah Kajendren
By Erimalai Jul 04, 2023 04:16 AM GMT
Report

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான நான்காம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (02.07.2023) மாலை 03 மணியளவில் நான்காம் கட்டமாக ஆரம்பமான தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று (03.07.2023) மாலை-05.45 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

போயா தினத்தை முன்னிட்டு நேற்று மேற்படி விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்ற நிலையிலேயே நேற்று (03.07.2023) இரண்டாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கவனயீர்ப்புப் போராட்டம்

கடந்த பல தடவைகள் விகாரைக்கு முன்பாக அமைந்துள்ள காணியைப் போராட்டம் நடத்துவதற்கு வழங்கிய காணியின் உரிமையாளர் பலாலிப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுப் பலாலிப் பொலிஸாரால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருந்த காரணத்தால் விகாரை அமைந்துள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே தனியார் காணியில் நேற்று தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இரண்டாவது நாளாக நேற்று திங்கட்கிழமை காலை முதல் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் விகாரைக்குச் செல்லும் அதே வீதியின் வலது பக்கத்தால் குறித்த விகாரைக்கு இராணுவ வாகனங்கள் செல்வதை அவதானித்த போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர் நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென அங்கிருந்து பேரணியாகச் சென்று வீதியோரமாகப் புதிதாகப் போராட்டக் களத்தை ஆரம்பித்துத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தையிட்டியில் நிறைவுபெற்ற போராட்டம்: பொலிஸார்-போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதம் (Video) | Thayitti Protest Completion

கைவிட்டு அங்கிருந்து அகன்றனர்

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட போராட்ட களத்திற்கு விரைந்து சென்ற பலாலிப் பொலிஸார் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட நிலையில் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்குமிடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதனையடுத்துப் பொலிஸ் அராஜகம் ஒழிக! எனப் போராட்டக்காரர்கள் உரத்துக் குரலெழுப்பியதையடுத்து பொலிஸார் போராட்டக்காரர்களுடன் முரண்படுவதைக் கைவிட்டு அங்கிருந்து அகன்றனர்.

தையிட்டியில் நிறைவுபெற்ற போராட்டம்: பொலிஸார்-போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதம் (Video) | Thayitti Protest Completion

இதனையடுத்து இரண்டு பகுதிகளிலும் தொடர்ந்தும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, நேற்றைய தினம் இரண்டு பிரிவுகளாகப் போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தமையால் குறித்த விகாரைக்குச் செல்வோரின் தொகை சடுதியாக குறைவடைந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாகவிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US