மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்ப தாய்லாந்து இணக்கம்
மியன்மாரிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அனுப்புவதற்கான ஒத்துழைப்புகளை வழங்க தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் இணக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்குமிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சசு கோரிக்கை
மியன்மார் அரசாங்கமானது சைபர் கிரைம் வலயத்தில் 56 இலங்கையர்கள் உள்ளனர் எனவும் அவர்களில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் அந்த குழுவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |