நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுத் தேர்தல்: ஆரம்பமாகவுள்ள வேட்புமனுத் தாக்கல்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த வேட்பு மனுத் தாக்கலானது கனடா, ஜேர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளது.
மேலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக் காலத்துக்கான வேட்புமனுதாக்கல் மார்ச் 15 ஆம் நாளன்று ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் மே 05, 2024 அன்று பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டென்மார்க்
கனடா
ஜேர்மனி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |