தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இரண்டரை மணி நேரம் விசாரணை
கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவரை மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று (7) விசாரணைக்கு உற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த கால சிவில் சமூக செயற்பாடுகள், நடாத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாகவும் குறிப்பாக மாவீரர் தின நிகழ்வுகள் சம்பந்தமாகவும் பல்வேறு கோணத்தில் கேள்விகள் தொடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த விசாரணைகள் ஊடாக எம்மை சிவில் சமூக செயற்பாடுகளிலிருந்து எமது சன நாயக குரல்வளையை நசுக்கும் விதமாகவே அவர்களின் கேள்விகள் காணப்பட்டதாகத் தெரிவித்தார். சிவில் அமைப்புக்களை வலுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச அரங்கில் ஜனாதிபதி கூறுகிறார்.
ஆனால் மறுபுறத்தில் சிவில் அமைப்புக்களை நசுக்க முனைகிறது அரசின் புலனாய்வு அமைப்புகள். ஆகவே அரசின் இவ்வாறான நெருக்கடிகளைக் கண்டு நாம் அச்சப்படப் போவதில்லை. இவ்விதமான விசாரணைகள் எமக்கு புதியவை அல்ல.
எனவே எமது சமூகப் பணி தொடர்ந்தும் தொடரும் என்பதுடன் சிவில் சமூக
அமைப்புக்களை இலங்கை அரசு தொடர்ந்து நசுக்க முனைவது வேதனைக்குரிய விடயம்
என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam