பாகிஸ்தானில் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி தளத்தின் மீது ஆயுதமேந்திய குழு திடீரென தாக்குதல் நடத்தியதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலானது இன்று(04.11.2023) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலை எதிர்பார்க்காத நிலையில், பணியில் இருந்த பாதுகாப்புப்படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
தொடர் தாக்குதல்
இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதோடு மூன்று பேர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.இருந்த போதிலும், மூன்று விமானங்கள் சேதமடைந்ததாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் பாதுகாப்புப்படை நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை அகற்றுவதில் உறுதியாக உள்ளது எனவும் கூறியுள்ளது.
இதற்கிடையே தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா





இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் டிவியின் தங்கமகள் சீரியல்.... கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோ இதோ Cineulagam

அறிவுக்கரசி கையில் வீடியோ.. குணசேகரனை மாட்டி விடுவாரா! - எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு ப்ரோமோ Cineulagam

உலகின் மிகப்பெரிய யுரேனிய உற்பத்தி நாட்டில் முதல் அணுமின் நிலையம்! பணியைத் தொடங்கிய ரஷ்யா News Lankasri
