பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் பிரதமர் வழங்கியுள்ள உறுதிமொழி-செய்திகளின் தொகுப்பு
கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது, சாதாரண சட்டமே பயன்படுத்தப்படும் என எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை எமது அரசாங்கம் பாதுகாக்கும். உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது. தனி நபருக்குரிய உரிமை, ஏனையவர்களின் உரிமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது, சாதாரண சட்டமே பயன்படுத்தப்படும்.” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை மாலை நேர செய்திகளின் தொகுப்பு,