அநுர குமார அரசாங்கத்திற்கு தேவைப்படும் பயங்கரவாத தடைச்சட்டம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு பயங்கரவாத தடைச்சட்டமொன்று தேவையாக உள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(10 )யாழ்.ஊடக அமையத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“அவர்களுக்கெதிராக வரக்கூடிய போராட்டங்களை கையாளுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவையாகவுள்ளது.
கடற்றொழில் அமைச்சராக உள்ளவர், இலங்கைக்கு கடற்றொழில் அமைச்சரா அல்லது யாழ்ப்பாணத்திற்கு கடற்றொழில் அமைச்சரா என்று தெரியவில்லை. கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் போல பலரை சந்தித்து தான் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நிக்குவோம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறியிருந்தார்கள்.
தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருந்தார்கள், ஆனால் அவர்கள் இப்போது அதனை செய்வதற்கு தயாராக இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
