ஹட்டன் பொலிஸ் விடுதியில் நடந்த கொடூரம்: ஒருவர் வைத்தியசாலையில்..
ஹட்டன் - பொகவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதான பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல் உத்தரவு
பொகவந்தலாவ பொலிஸ் விடுதியில் தங்கியிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், ஒரு உத்தியோகத்தர் மற்றொருவரைத் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் தற்போது நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
10000 ரூபாவிற்கு மேல் பொருள் வாங்குவோருக்கு கிடைக்கவுள்ள நன்மை - இலங்கையில் அரசாங்கத்தின் புதிய திட்டம்