மீண்டும் பயங்கரமான கோவிட் அலை ஏற்படலாம் - எச்சரிக்கும் விசேட மருத்துவ நிபுணர்கள்
இலங்கைக்குள் மீண்டும் பயங்கரமான கோவிட் அலை ஏற்படலாம் என விசேட மருத்துவ நிபுணர்கள், சுகாதார அமைச்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்போவதில்லை என்பதே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெளிநாட்டில் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டால் மற்றும் பி.சி. ஆர். பரிசோதனை செய்துகொண்டிருந்தால், அவர்களை எவ்வித கோவிட் பரிசோதனைக்கும் உட்படுத்தாது, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில சுற்றுலாப் பயணிகள் பி.சி. ஆர். பரிசோதனை செய்துகொண்டதாகப் போலி சான்றிதழ்களைச் சமர்ப்பித்து நாட்டுக்குள் பிரவேசிக்கும் ஆபத்து இருப்பதாகவும் இதன் மூலம் மீண்டும் கோவிட் அலை ஒன்று ஏற்படலாம் எனவும் விசேட மருத்துவ நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அப்படியான நிலைமை ஏற்பட்டால், அதற்கான பொறுப்பைச் சுகாதார அமைச்சு ஏற்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.