சீனாவில் அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ : ஆபத்தான நிலையில் 300 பேர்
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள கொங்கொங் - ஹாஸ்வே பே என்ற இடத்தில், 38 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இன்று நண்பகல், இக்கட்டிடத்திற்கு மின் இணைப்புகளை வழங்கும் ஒருங்கிணைந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பின் கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால், கட்டிடத்தில் இருந்த 300 க்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்டனர்.
விபத்துக் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்தில் 8 பேர் மூச்சுத்திணறலுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையோரை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 23 மணி நேரம் முன்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri