கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்காலம் நீடிப்பு
கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவின் பதவிக்காலம், மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அவரின் பதவிக் காலத்தை நீடிக்க அனுமதிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுத்த கோரிக்கையை அரசியலமைப்பு பேரவை இன்று அங்கீகரித்துள்ளது.
இந்தக் கோரிக்கையை, பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் அங்கீகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவிக்காலம்
முன்னதாக, கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படு;த்தாத ஒருவரை, கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்திருந்தார்.
எனினும் அதனை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது. இதனையடுத்தே நடப்பு கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு பேரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
