யாழ். பல்கலைக்கு வருகைத்தரவுள்ள சீன விரிவுரையாளர்
இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு காரணமான சீனா இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுரை கூற வருவது ஆச்சரியம் அளிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“நாளைய தினம் வெள்ளிக்கிழமை சீன நாட்டின் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு வறுமை ஒழிப்பு பொருளாதார முன்னேற்றம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றை வழங்குவதற்காக யாழ். பல்கலைக்கழகத்திற்கு வருகை தரவுள்ளார்.
கோவிட் -19க்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுக்கு பின்னர் ஐந்து வருடங்கள் கடந்தும் இலங்கையின் பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
வெளிநாட்டு கடன்
கோவிட் 19 நோய் இலங்கையை மட்டுமல்ல உலகில் பல நாடுகளை தாக்கிய போதும் அந்த நாட்டின் பொருளாதாரங்கள் திடீரென சரிவுகளை கண்டிருந்தாலும் அதை வேகத்தில் மீண்டெழுந்தது.
குறிப்பாக சுமார் 120 கோடி சனத்தொகையை கொண்ட இந்தியா கோவிட் 19 நோய் தாக்கம் ஏற்பட்ட போதும் பொருளாதார ரீதியாக சரிவுநிலைக்கு செல்லாத நிலையில் இன்று விவசாயத் தறையில் தன்னிறைவு கொண்ட ஒரு நாடாக திகழ்கிறது.
அதேபோன்று பங்களாதேஷ் கோவிட் தாக்கத்துக்கு அகப்பட்ட நாடாக இருந்தும் பொருளாதார சரிவுக்கு எட்டாது இலங்கைக்கு கடன் வழங்கிய பட்டியலில் பங்களாதேஷசும் உள்ளது.
இலங்கை பெற்றுக் கொண்ட வெளிநாட்டு கடனில் சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடன் 46 வீதமாக காணப்படுகின்ற நிலையில் தொடர்ந்து இலங்கை சீனாவின் கடன் பொறியில் சிக்கி உள்ளது.
ஒரு நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டும் என்றால் அந்த நாட்டுக்கு கடன் மேல் கடனை ஆள்ளி வழங்குவதை விட பொருளாதார ரீதியான தூரநோக்கு திட்டங்களை வளர்க்க வேண்டும்.
பொருளாதார ரீதியான திட்டம்
ஆனால் சீனா இலங்கையில் பொருளாதார ரீதியான திட்டங்களை வளர்க்காமல் தன்னை தங்கி வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு இலங்கைக்கு கடனை அள்ளி வழங்கி வருகிறது.
இவ்வாறு கடன் மேல் கடனை அள்ளி வழங்கும் சீனா இலங்கையின் வறுமை நிலைக்கு பிரதான காரணமாக அமைவதோடு தொடர்ந்து இலங்கையை தனது ஆதிக்கத்துக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக இலங்கைக்கு அயல் நாடான இந்தியாவை குறி வைத்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு திட்டங்களை சீனா மறைமுகமாக மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் கருத்தரங்கு என்ற போர்வையில் உள்நுழைய ஆரம்பித்துள்ளது.
உண்மையில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் அதனை மத்திய அரசாங்கத்துடன் கருத்தரங்குகளை மேற்கொண்டு திட்டங்களை முன்வைக்க வேண்டும். ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வறுமையை ஒழிப்பதற்காக சீனா முயல்வது இந்தியாவை சீண்டுவதாகவே பார்க்க முடியும்.
இறுதி யுத்ததின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கி தமிழ் மக்களை அழித்ததில் சீனாவுக்கும் பங்குள்ளது. யுத்தம் நிறைவடைந்து பதினைந்து வருடங்கள் கடக்கின்ற நிலையில் சீனா தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடையங்கள் கரிசனை அற்ற நாடாகவே பார்க்கப்ப்டுகிறது.
ஆகவே சீனா இலங்கையின் வறுமையை ஒழிக்க வேண்டுமானால் முதலில் வழங்கிய கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் புதிய கடன்களை வழங்குவதை நிறுத்துங்கள் இலங்கை மறுமையில் இருந்து மீண்டு அபிவிருத்தியின் பாதையில் பயணிக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
