இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்த பதற்றம்
ஜம்மு - காஷ்மீரில் உள்ள எல்லை பகுதிக்கு அருகே பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலடியாக இந்தியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம்
தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் குழுவை குறிவைத்து கடந்த 22 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 'தெளிவான' பதிலடி கொடுப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
மேலும் குற்றவாளிகள் தப்பிக்க மாட்டார்கள் என்று வலியுறுத்தியுள்ளது.
வியாழக்கிழமை பீகாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, பிரதமர் நரேந்திர மோடி, "ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களை வழிநடத்துபவர்களையும், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையும் இந்தியா அடையாளம் கண்டு, கண்காணித்து தண்டிக்கும். பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது" என்று கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam