மானிப்பாய் பிரதேச சபை அமர்வில் பதற்ற நிலை - அவமதிக்கப்பட்டதாக சபை உறுப்பினர் குற்றச்சாட்டு
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது நேற்றைய தினம்(24.04.2026) தவிசாளர் க.ஜெசீதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, உறுப்பினரான நா.பகீரதன், தவிசாளரின் வட்டாரத்தில் உள்ள பிரச்சனை ஒன்றினை பேசுவதற்கு முயன்றவேளை கூட்டத்தை முடித்துவிட்டு தவிசாளர் எழுந்து சென்றுள்ளார்.
இதனால் தான் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்றும், கூட்டத்தை முடிவுறுத்த வேண்டாம் என்றும் குறித்த உறுப்பினர் கூறியவேளை, அவரை அவமதிக்கும் வகையில் பேசிவிட்டு தவிசாளர் சபா மண்டபத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
உறுப்பினரின் கோரிக்கை
இந்த சம்பவம் தொடர்பில் உறுப்பினர் நா.பகீரதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தவிசாளரின் வட்டாரத்தில் உள்ள சண்டிலிப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதி புனரமைப்பு மற்றும் அதனை வர்த்தமானியில் பிரசுரிப்பது தொடர்பாகவே பேச முயன்றேன்.

தவிசாளரின் சொந்த வட்டாரத்தில் உள்ள அந்த வீதிக்கான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. அதனை நான் சுட்டிக்காட்ட முயன்றபோது தனக்கு அது பாதகமாக அமையும் என்பதால் அவர் சபையை விட்டு வெளியேறிவிட்டார்.
ஒரு தவிசாளர் தனது எண்ணத்திற்கு ஏற்ப சபைக் கூட்டத்தை முடிவுறுத்தி விட்டு வெளியேற முடியுமா என்று தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
ஜனனியை முடித்துவிட பிளான் போட்ட குணசேகரன், ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam