வட்டுக்கோட்டை தொகுதி கிளை கூட்டத்தில் பதற்றநிலை - இடை நடுவே கிளம்பிய சுமந்திரன்

Sri Lankan Tamils M A Sumanthiran Sri Lanka Politician Sri Lankan Peoples
By Kajinthan Apr 24, 2026 06:25 AM GMT
Report

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கூட்டமானது, நேற்று(23.04.2026) கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கட்சியை விட்டு விலகிய காரணத்தால் அந்த பதவிகளை மீள் நிரப்புவதற்கான நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

இலங்கையில் உடனடியாக மற்றுமொரு தேர்தல்! அநுர தரப்பிற்கு சென்றுள்ள முக்கிய கோரிக்கை

இலங்கையில் உடனடியாக மற்றுமொரு தேர்தல்! அநுர தரப்பிற்கு சென்றுள்ள முக்கிய கோரிக்கை

உப தலைவர் பதவி தெரிவில் குழப்பம் 

காரைநகர் பிரதேச சபையும் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளைக்குள் உள்ளடங்குவதால் அங்கு இருப்பவர்களுக்கும் முக்கிய பதவி ஒன்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அந்தவகையில், உப தலைவராக இருந்த ச.ஜயந்தன் தலைவராகவும், காரைநகரை சேர்ந்த ஆனைமுகன் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

வட்டுக்கோட்டை தொகுதி கிளை கூட்டத்தில் பதற்றநிலை - இடை நடுவே கிளம்பிய சுமந்திரன் | Tension Prevails At Vaddukottai Branch Meeting

இந்நிலையில் உபதலைவர் பதவி வறிதாக காணப்படுவதாகவும் அதற்கு ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலையில் முரண்பாடு ஆரம்பித்தது. இருப்பினும் அத்துமீறி பரணி உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இதன்போது, கட்சியின் நீண்டகால உறுப்பினர்களுக்கும் பதில் செயலாளருக்கும் இடையில் கடும் கருத்து மோதல் இடம்பெற்றது.

அந்தவகையில் கட்சியின் உறுப்பினர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

கட்சியின் மத்தியகுழு தலைவர் தெரிவு இடம்பெற்ற நிலையில் அந்த தெரிவு இடம்பெற்ற முறை பிழையானது என கூறி நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய குழுவில் பதில் தலைவர், பதில் செயலாளர் பதவியே நடைமுறையில் காணப்படுகிறது.

பதவிக்கான உறுப்பினர்கள் தெரிவு.

மத்தியகுழுவில் இவ்வாறு இருக்கும்போது தொகுதிக் கிளையில் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்றால் பதில் தலைவர், பதில் செயலாளரை தெரிவு செய்யலாம். ஆனால் தலைவர், செயலாளர் பதவியே தெரிவு செய்யப்பட்டது.

உப தலைவரின் வெற்றிடத்தை நிரப்புவது என்றால் ஒட்டுமொத்தமாக உறுப்பினர்களையும் தெரிவு செய்யலாமே. ஏன் தலைவர், செயலாளர், உபதலைவர் தெரிவுகள் மாத்திரம் இடம்பெற வேண்டும்.

கட்சியின் உறுப்பினர்கள் அல்லாதோரும் வாக்களித்ததாக கூறித்தான் தலைவர் தெரிவு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கட்சியின் உறுப்பினர்களோ என்றுகூட தெரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு மேலாக கட்சியின் உறுப்பினர்களாக இருப்பவர்களே நிர்வாகத்துக்குள் வரமுடியும்.

அந்தவகையில் இன்றைய கூட்டத்தின் தெரிவுகள் யாப்பிற்கு முரணாக இருக்கிறது. தமக்கு இயன்றவர்களை அழைத்தே இந்த நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

காரணம் என்னவென்றால், தமக்கு ஆதரவானவர்களை தெரிவு செய்தால் அடுத்தகட்ட மத்திய குழுவுக்கான தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய தெரிவுகள் இடம்பெறும்போது அவர்களை வைத்து தாங்கள் அந்த முக்கிய பதவிகளுக்குள் வரமுடியும் என்பதே நோக்கமாகும்.

தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக நாங்கள்..!

பதில் தலைவர், பதில் செயலாளர் பதவிகளை வைத்துக்கொண்டு தொகுதிக் கிளையை நடத்த முடியாது என்று சுமந்திரன் கூறினார். பதில் தலைவர், பதில் செயலாளர் பதவிகளை வைத்துக்கொண்டு தொகுதிக் கிளையையே நடத்த முடியாது என்றால் அந்த பதவிகளை வைத்துக்கொண்டு எவ்வாறு ஒரு மத்திய குழுவை நியமிக்க முடியும்? சுமந்திரனை விட கட்சிக்குள் மூத்தவர்கள் இருக்கின்றோம். நாங்கள் கட்சியை வளர்ப்பதற்காக ஒவ்வொரு வீட்டு படலைகளையும் திறந்து வாக்கு சேகரித்தோம்.

வட்டுக்கோட்டை தொகுதி கிளை கூட்டத்தில் பதற்றநிலை - இடை நடுவே கிளம்பிய சுமந்திரன் | Tension Prevails At Vaddukottai Branch Meeting

சுமந்திரன் எத்தனை படலைகளை திறந்து வாக்கு சேகரித்தார்? பதவிகளுக்கு தெரிவு செய்யப்படும் அவருக்கு சார்பானவர்கள் எத்தனை படலைகளை திறந்து வாக்கு சேகரித்தனர்? தாங்களே ஒன்றை சொல்லி, தாங்களே ஒன்றினை தீர்மானித்துவிட்டு அதன்படி நடக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

தேர்தலுக்கு பிரசாரம் செய்து வீடு வீடாக சென்று வாக்கு கேட்பதற்கு நாங்கள் தேவை, ஆனால் எங்களது கருத்துகளை கணக்கில் எடுப்பதில்லை. எந்த தேர்தல் வந்தாலும் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. கட்சிக்காக உழைப்பவர்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்றனர்.

இன்றைய கூட்டத்தில் பதில் செயலாளரை பார்த்து உறுப்பினர்கள் சிலர் ஒருமையில் விழித்து கடுமையாக சாடினர். நிலையை சமாளிக்க முடியாத நிலையில், நன்றியுரையும் இடம்பெறாமல் சுமந்திரன் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு வெளியேறியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.       

அநுர அரசிற்கு தொடரும் நெருக்கடி! பெருந்தொகை டொலர்கள் மாயத்தின் பின்னணியில் சதி

அநுர அரசிற்கு தொடரும் நெருக்கடி! பெருந்தொகை டொலர்கள் மாயத்தின் பின்னணியில் சதி

பிள்ளையான் சிறையிலிருந்த போது நடந்துள்ள இரகசிய சந்திப்புகள்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

பிள்ளையான் சிறையிலிருந்த போது நடந்துள்ள இரகசிய சந்திப்புகள்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US