ராஜபக்ஷ சகோதரர் முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்ட பிக்குவால் பதற்றம்
ஜனாதிபதி, பிரதமரின் மூத்த சகோதரான அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் சூரியவெவ கிராம மக்களுக்கு இடையில் இன்று மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
மஹாவெலி காணி பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இடம்பெற்ற வாய்த்தராறு மோதல் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காணி பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக அமைச்சர் ராஜபக்ஷவை சந்திப்பதற்கு சூரியவெவ கிராம மக்கள் அவருடைய அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
இதன் போது அங்கிருந்த தேரர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த சிலருக்கு குறித்த பிக்கு தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளார். எனினும் இறுதியில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படவுள்ளதென அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 10 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
