ஆளும் தரப்பு என கடை கோரிய தரப்பினர்: சட்டரீதியாக அகற்றப்பட்ட வியாபார நிலையங்கள்
மன்னாரில் நகரசபைக்கு சொந்தமான வீதியில் தேசிய மக்கள் சக்தி கட்சிகாரர்கள் என கூறி அடாவடியில் ஈடுபட்ட வியாபாரிகளின் வியாபார நிலையங்கள் சட்டரீதியாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17.12.2024 ஆம் திகதி மன்னாரில் நகரசபைக்கு வீதியில் உள்ள கடைகளை அகற்ற கோரி பொலிஸார் மற்றும் அதிகாரிகளால் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எனினும், அங்கு தேசிய மக்கள் சக்தி கட்சிகாரர்கள் என கூறிக்கொண்டு எதிர்ப்பை வெளியிட்ட தரப்பினரது கடைகள் இன்று சட்டரீதியாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
வியாபார நடவடிக்கை
“மன்னார் நகரசபைக்கு சொந்தமான வீதியில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நகரசபையால் நாள் தோறும் அனுமதி வழங்கப்பட்டு அவற்றுக்கான பற்றுசீட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் வருட இறுதியில் குத்தகை அடிப்படையில் கடைகள் விற்பனை செய்வதற்காக 10 -15 நாட்கள் குறித்த வியாபாரிகளை வேறு இடங்களில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகரசபையால் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்படும்.
இவ்வாறு நகரசபை கோரிக்கை முன்வைக்கும்போது நாள் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் வேறு இடங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருட இறுதி சந்தை நிறைவடைந்ததும் மீண்டும் அதே பகுதியில் நகரசபையின் அனுமதியுடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.
வியாபார நடவடிக்கை
ஆனால் இம்முறை அப்பகுதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 30 க்கு மேற்பட்ட நாள் வியாபாரிகள் நகரசபையின் கோரிக்கையை ஏற்று வேறு இடங்களுக்கு சென்ற போதிலும் தாங்களை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என வெளிப்படுத்திய சிலர் கடைகளில் இருந்து வெளியேற மறுப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த விடயம் சட்ட விரோதம் என்ற அடிப்படையில் மன்னார் பொலிஸாரின் உதவியுடன் குறித்த கடைகளை மன்னார் நகரசபை அகற்ற முற்பட்ட வேலை குறிப்பிட்ட சில வியாபாரிகள் பொலிஸார் மற்றும் நகரசபை செயலாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் தாங்கள் ஆளுநரிடம் பேசி விட்டதாகவும் வியாபார நிலையங்களை மூட முடியாது எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |