கொழும்பின் முக்கிய எரிபொருள் நிலையத்தில் பதற்றம்! பொலிஸார் மீது தாக்குதல் (Video)
கொழும்பு - கொட்டாஞ்சேனையில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய்க்காக காத்திருக்கும் மக்கள்
கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மண்ணெண்ணெய் பெறுவதற்காக குறித்த எரிபொருள் நிலையத்திற்கு அருகே மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் மண்ணெண்ணெய் எரிபொருள் நிலையத்திற்கு வருவதாக தெரியவந்ததையடுத்து கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் பலர் எரிபொருள் நிலையத்தின் முன் ஒன்றுகூடியுள்ளனர்.
| பெட்ரோல் 500 ரூபா: டீசல் 450 ரூபா! இலங்கையில் எகிறப்போகும் விலைகள் - வெளியானது முக்கிய தகவல் |
பொலிஸார் மீது தாக்குதல்
இதேவேளை மண்ணெண்ணெய் பெறுவதற்காக காத்திருந்த நபரொருவர் எரிபொருள் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸாரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் அங்கு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பின் பல பகுதிகளை சேர்ந்த குறிப்பாக கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் இதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த எரிபொருள் நிலையத்திலேயே எரிபொருளை பெற்றுக்கொள்ள வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri