ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் பிரான்ஸ் விமான நிலையமொன்றில் பதற்றம்
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸின் (France) பாரிஸ் நகரில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், பிரான்ஸ் - சுவிஸ் எல்லையிலுள்ள 'Mulhouse' விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து, விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதன்பின்னர், அது போலியான மிரட்டல் என்பது தெரியவர, விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பெரும் பரபரப்பு
முன்னதாக, நேற்று பிரான்ஸ் நாட்டின் அதிவேக தொடருந்து பாதைகளுக்கு சில மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது.

இதனால், குறித்த தொடருந்து பாதைகளை பயன்படுத்தவுள்ள 800,000 பயணிகள் பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சிறிது நேரத்தில், ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட இருக்கும் நிலையில், தொடருந்து பாதைகளில் தீவைப்பு, வெடிகுண்டு மிரட்டல் என செய்திகள் வெளியாகிவருவதால், பிரான்சில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        