கொழும்பின் முக்கிய பகுதியில் கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு (Live)
பலத்த பாதுகாப்பு
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பெருமளவான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டித்து காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் ஏனைய இரண்டு நுழைவாயில்களையும் நேற்று நள்ளிரவில் முற்றுகையிட்டிருந்தனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் நுழைவாயில்களுக்கு முன்பாக கூடாரங்களை அமைத்து விண்ணதிரும் கோஷங்களுடன் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
| பிறந்த நாளை கொண்டாடும் கோட்டாபய ராஜபக்ச! குவிக்கப்பட்டுள்ள பெருமளவான இராணுவத்தினர் |
தொடரும் பதற்ற நிலை
இந்த நிலையில் தற்போதும் கூட அப்பகுதியில் தொடர்ச்சியாக பதற்ற நிலை நிலவி வருவதுடன், அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
| ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம் |
மேலும் அப்பகுதியில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கொழும்பில் உள்ள நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி அலுவலகங்களின் நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri