விமல் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டத்தில் அமைதியின்மை! பாதுகாப்புடன் வெளியேறிய அரசியல்வாதிகள்
விமல் வீரவன்சவின் மேலவை இலங்கை கூட்டணியால் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றுக்கு அங்குள்ள இளைஞர் குழுவொன்று எதிர்ப்பு தெரிவித்தமையால் பெரும் அமைதியின்மை ஏற்பட்டதுடன் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண ஆகியோர் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியேறும் நிலை ஏற்பட்டது.
மேலவை இலங்கை கூட்டணியின் கண்டி மாவட்ட அரசியல் கூட்டம் கண்டி புஷ்பதன மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பு முடிவடைந்த பின்னர், மண்டபத்தில் இருந்து விமல் வீரவன்ச உள்ளிட்ட கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் குழு ஒன்று கூச்சலிட்டு திட்டியதால் இரு குழுக்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,