“உறுப்பினரே பொய் பேச வேண்டாம்”! நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம்
காமினி திசாநாயக்க ஒரு இனவாதி என சிறீதரன் எம்.பி தெரிவித்ததால் அவருக்கும் சபைக்கு தலைமை தாங்கிய காமினி திஸாநாயக்கவின் மகனும், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்கவுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.
சிறீதரன் உரையாற்றுகையில், லலித் அத்துலத் முதலி ஒரு இனவாதி, பிரேமதாச ஒரு இனவாதி, காமினி திசாநாயக்க ஒரு இனவாதி. இவர்கள் இனவாத வெறிபிடித்தவர்கள் எனக்கூறினார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த காமினி திசாநாயக்கவின் மகனும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மயந்த திசாநாயக்க குறுக்கிட்டு உங்களுக்கான உரையாற்றும் நேரம் முடிவடைந்து விட்டது, பேச்சை நிறுத்துங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சிறீதரன் தொடர்ந்தும் கருத்துரைக்கையில், உறுப்பினரே பொய் பேச வேண்டாம், தவறான கருத்தை கூற வேண்டாம் என மயந்த திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,