மட்டக்களப்பு மாவட்ட வெள்ள அனர்த்தம்: பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய செய்கை பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 5100 ஏக்கர் விவசாய செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (12.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் வடிகால் அமைப்பு செயல்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதோடு அதற்கான நிதி தேவையும் நமது மாவட்டத்தில் உள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களது பிரிவிலுள்ள சமநல சேவை திணைக்களத்திற்கு வந்து பாதிப்பு விவரங்களை பதிவு செய்து கொண்டால், அவர்களுக்குரிய விவசாய காப்புறுதி நஷ்ட ஈடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |