காய்ச்சல் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல் - 10 மாவட்டங்கள் அபாய வலயங்களாக அடையாளம்
இரண்டு நாட்களுக்கும் மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை நாடுமாறு நாட்டு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், டெங்கு காய்ச்சல் கோவிட்டை போல் இல்லை. சமூக இடைவௌியை கடைபிடிப்பதால் அதில் இருந்து பாதுகாப்பு பெற முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டில் டெங்கு அபாயமிக்க வலயங்களாக 10 மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam