வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை மீறிய ஆலய நிர்வாகத்தினர் தனிமைப்படுத்தலில்
வவுனியாவில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத ஆலயத்தினர் மூவர் சுகாதார பரிசோதகர்களால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று சுகாதார பரிசோதகர்களால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெரு, ஞானவைரவர் ஆலயத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாது சுமார் 50க்கு மேற்பட்டவர்களுடன் நேற்று முன்தினம் மாலை அட்டமி பூஜை நடைபெற்றுள்ளது.
இதன்போது குறித்த ஆலயத்திற்கு விஜயம் செய்த சுகாதார பரிசோதகர்கள் ஆலயத்தைப் பார்வையிட்டதுடன், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் மூவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக ஆலய குரு, உபயகாரர், ஆலய நிர்வாகத்தைச்
சேர்ந்த ஒருவர் என மூவர் சுகாதார பரிசோதகர்களால் சுய
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.




