எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும் வெப்பநிலை! வெளியான முக்கிய அறிவிப்பு
வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது நாளைய தினம் எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.
எச்சரிக்கை
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் ,சப்ரகமுவ ,தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் நாளைய தினம் (31) வெப்பநிலை 'கவனம் செலுத்த வேண்டிய' அளவை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே, பொது மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன்,போதியளவு நீர் அருந்துமாறும், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri