பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் தொலைபேசி ஊடாக முக்கிய பேச்சுவார்த்தை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் (Narendra Modi) எலான் மஸ்க்கிற்கும் (Elon Musk) இடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது தொலைபேசி ஊடாக இடம்பெற்றுள்ளதாக இந்தியப் பிரதமர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன்போது, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்காவுடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முன்னேற்றுவதற்காக இந்தியா செயற்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
Spoke to @elonmusk and talked about various issues, including the topics we covered during our meeting in Washington DC earlier this year. We discussed the immense potential for collaboration in the areas of technology and innovation. India remains committed to advancing our…
— Narendra Modi (@narendramodi) April 18, 2025
அதேநேரம், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்குச் செல்லவுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam