மக்கள் குடியிருப்பில் தொலைத்தொடர்பு கோபுரம்! அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு
வவுனியா - உக்குளாங்குளம் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு கோபுரத்தை அங்கிருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடி விசாரணைகளை மேற்கொள்வதற்கு தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு விசாரணைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் அமைக்கப்பட்டு வரும் தொலைத்தொடர்பு கோபுரம் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நகரசபையினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவையும் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை, மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படவில்லை, மக்களின் கருத்து அறியப்படவில்லை, குறிப்பாக அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அப்பகுதி மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை மேற்கொண்டனர்.
இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடி விசாரணைகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தொடர்புபட்ட துறை அதிகாரிகள் , கிராம அபிவிருத்திச்சங்கம் ஆகியவற்றிற்கு எதிர்வரும் புதன்கிழமை விசாரணைகளுக்கு வருமாறு அறிவித்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
