மனுஷ நாணயக்காரவிடம் ஒரு பில்லியன் கோருகிறது ஸ்ரீலங்கா டெலிகொம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, தமக்கு ஒரு பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் என்று கோாி ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம், அவதூறு வழக்குக்கான சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா டெலிக்கொம்மின் வர்த்தக நாமத்திற்கும் நற்பெயருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு மற்றும் சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நாணயக்கார, 03 செப்டம்பர் 2021 அன்று, SLT ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம்,தேசிய மருந்துகள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளின் (NMRA) தரவு சேமிப்பகத்தை வழங்கியதாகவும், ஸ்ரீலங்கா டெலிகொம் தலைவரும் உள்நோக்கங்களுக்காக, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை சபையின் ( NMRA) தரவை வேண்டுமென்றே அழித்ததாக மனுஷ நாணயக்கார குற்றம் சுமத்தியிருந்தாா்.
தமது சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கும் முன்னா், திருத்தங்களை வெளியிடுமாறுக் கோாி, ஸ்ரீலங்கா டெலிகொம், நாணயக்காரவுக்கு இரண்டு கோரிக்கைக் கடிதங்களை அனுப்பியது.
எனினும் அவா் அதற்கு உடன்படவில்லை.
இதனையடுத்து சட்ட நடவடிக்கைக்கு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா டெலிகொம் தொிவித்துள்ளது.
இந்த விடயம் தொடா்பில் ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri