காதல் உறவில் ஈடுபட்ட மாணவன் மீது கொடூர தாக்குதல்
முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் மகளுடன் காதல் உறவில் ஈடுபட்டதாக கூறி, 15 வயது பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் ஊராபொல பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த மாணவன் தடியால் தாக்கப்பட்டு, கொலை மிரட்டல் விடுத்து ஊராபொல விகாரைக்கு அருகில் நீண்ட நேரம் மண்டியிட வைத்திருந்ததாக மாணவனின் தாயார் அத்தனகல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் ,மண்டியிட்டுக் கொண்டிருந்த காட்சிகளை தான் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், தனது மகன் அதிக காயங்களுக்கு உள்ளாகி இருந்ததாகவும் மாணவனின் தாயார் வழங்கிய முறைப்பாட்டில் காணப்படுவதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் விரிவான விசாரணை
இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் மாணவன் தாக்கப்பட்ட காணொளி காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர் பற்றிய தகவல்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை அத்தனகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
