இலங்கையில் இளம் வயதினருக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட் தொற்று! - 18 வயதான யுவதி ஒருவர் பலி
இலங்கையில் அண்மையில் அடையாளம் காணப்பட்டுள்ள கோவிட் தொற்றாளர்களில் இளைஞர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பதிவான கோவிட் தொடர்பான நான்கு இறப்புகளில் வத்தளை பகுதியை சேர்ந்த 18 வயதான இளம் யுவதி ஒருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 18 வயதான குறித்த யுவதி வத்தளையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய உயிரிழந்த மூவரும் பாதிக்கப்பட்ட நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 35 வயதுடையவரும், பன்னிபிட்டிய பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும், மஹரகமவை சோர்ந்து 71 பெண் ஒருவம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 638 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் தற்போது கோவிட் வைரஸ் தொற்றினால் அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன நேற்று தெரிவித்திருந்தார்.
கோவிட் வைரஸின் புதிய மாறுபாடு மூத்தவர்களை மட்டுமல்ல , இளைஞர்களையும் பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இளைஞர்களிடையே வைரஸ் பரவுவதால், இளைஞர்களுக்கு ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பு தெரிவிக்கின்றது.
சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இளைஞர்களுக்கு ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசி பயன்படுத்தப்படலாம், ஃபைசர் தடுப்பூசியும் இளைஞர்களுக்கும் பயன்படுத்தப்படலாம். இந்நிலையில், ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசி மற்றும் ஃபைசர் தடுப்பூசி வாங்க இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதேவேளை, இந்த கோவிட் வைரஸின் புதிய மாறுபாடு அதிக வேகமாக பரவும் தன்மையை கொண்டுள்ளது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மலாவிஜ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவர் முந்தைய மாறுபாட்டிற்கு மாறாக 5-6 பேர் வரை அதைப் பரப்ப முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பு
திய மாறுபாட்டிலிருந்து வரும் நீர்த்துளிகள் ஒரு மணி நேரம் காற்றில் பறக்கின்றன, எனவே அந்த இடத்தை கடக்கும் நபர்களுக்கு தொற்று ஏற்படக்கூடும், ஆகையினால் முகமூடி அணிவது மிகவும் அவசியமான ஒன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 15 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
