கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் ஆயுதம் வெடித்து பொலிஸ் அதிகாரி பலி
அலரி மாளிகைக்கு அருகில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றமான நிலைமைக்கு இடையில் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை நடத்த பயன்படுத்தும் ஆயுதம் வெடித்த சம்பவத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
உப பொலிஸ் பரிசோதகர் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதலை நடத்த முயற்சித்த போது, அந்த ஆயுதம் வெடித்துள்ளதுடன் அவர் படுகாயமடைந்துள்ளார்.
தொடர்ந்தும் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாக ஆயுதம் சூடாகி காணப்பட்டதாகவும் இதன் காரணமாக அந்த ஆயுதம் வெடித்துள்ளது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை இம்மதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி. சரத் குமார உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேச சபை தலைவரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam