உலக டெஸ்ட் செம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கு வாய்ப்பை கொண்டுள்ள அணிகள்
சர்வதேச ரீதியாக நடந்து கொண்டிருக்கும் நான்கு டெஸ்ட் தொடர்களின் முடிவுகள், உலக டெஸ்ட் செம்பியன்சிப் 2023 - 25 புள்ளிப்பட்டியல் நிலைகளை மாற்றியுள்ளன.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய அணிகளுக்கு எதிராக பெற்ற வெற்றிகள், அந்த அணிகளை பட்டியலில் உயர்த்தியுள்ளன. செம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்த இரண்டு அணிகளும் கொண்டுள்ளன.
எனினும் அடுத்து வரும் போட்டிகள் அந்த அணிகளுக்கு முக்கியமானவையாக உள்ளன. சொந்த மண்ணில் பங்களாதேஸூக்கு எதிரான வெற்றியின் மூலம், மேற்கிந்திய தீவுகள் அணி புள்ளிப்பட்டியலில் கீழே தம்மை உயர்த்தியுள்ளது. இங்கிலாந்தும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.
இறுதி போட்டி
இந்தநிலையில், 2025 டெஸ்ட் செம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மேலும் நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெறவேண்டும். தென்னாப்பிரிக்க அணிக்கு இலங்கை அணியுடன் இன்னும் ஒரு டெஸ்ட் மற்றும் பாகிஸ்தானுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன.
இவை சொந்த மண்ணில் இடம்பெறும் போட்டிகள் என்பதால், தென்னாபிரிக்கா அதிக வெற்றி வாய்ப்புக்களை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. எனவே இந்த மூன்று போட்டிகளும் தென்னாபிரிக்க அணிக்கு முக்கியமானவையாகும்.
அவுஸ்திரேலியாவுக்கு இந்தியாவுடனான நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இலங்கையுடன் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன. இறுதிப்போட்டிக்கு செல்லவேண்டுமானால் இந்த போட்டிகளில் நான்கிலாவது அவுஸ்திரேலியா வெற்றி பெறவேண்டும். நியூசிலாந்துக்கு இங்கிலாந்துடனான இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன.
அந்த அணிக்கு செம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்பிருந்தபோதும், இங்கிலாந்துடனான தோல்வி பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடன் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளன.
இந்தநிலையில், தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்றால்தான், இலங்கை அணிக்கு அடுத்தகட்டத்தை அடையமுடியும். இங்கிலாந்துக்கு நியூசிலாந்துடன் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன.
டெஸ்ட் போட்டிகள்
எனினும் அந்த அணி பாகிஸ்தானில் பெற்ற தோல்விகள், செம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தவறச்செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுடன் நான்கு போட்டிகள் எஞ்சியுள்ளன.
புதிய பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பியின் கண்காணிப்பின் கீழ் பாகிஸ்தான் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் மொத்தம் ஆறு அணிகள் முன்னிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பில்லை.
மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஸூடன் ஒரு போட்டியிலும், பாகிஸ்தானுடன் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது. எனினும் செம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்புக்கள் இல்லை.
பங்களாதேஸ் அணிக்கு, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு போட்டி மாத்திரமே எஞ்சியுள்ளது. அதில் வெற்றிப் பெற்றாலும் கூட,உலக டெஸ்ட் செம்பியன்சிப் இறுதிப் போட்டியில் அந்த அணி இடம்பெற, அது போதுமானதாக இருக்காது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |