ஐந்து நாட்களும் ஆசிரியர்களை அழைப்பது சாத்தியமில்லை: இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் (VIDEO)

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Chandramathi Jun 04, 2022 03:17 PM GMT
Report

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவதென்பது பெரும் நெருக்கடியான விடயம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.

இதனை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவது தொடர்பாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளோம்.”

ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

அந்த கடிதத்தில், “தற்போதைய நெருக்கடியில் ஆசிரியர்கள் ஐந்து நாட்களும் பயணம் செய்து கற்பித்தல் பணியில் ஈடுபடுவது முடியாத காரியமாகும். நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தபடியே உள்ளன.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் பயணம் செய்வதால் உழைப்பின் முழுத் தொகையையும் போக்குவரத்திற்கு செலவழிக்க வேண்டியுள்ளது. ஆசிரியர்களை முழு நாட்களும் அழைப்பதெனில் அவர்களின் போக்குவரத்து செலவீனத்தில் அரைப்பங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மற்றைய திணைக்களங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு ஒத்ததாக பாடசாலைகளை இயக்குவதே சிறந்த வழியாகும்.

ஐந்து நாட்களும் ஆசிரியர்களை அழைப்பது சாத்தியமில்லை: இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் (VIDEO) | Teachers Sri Lanka Tamil Teachers Association

ஆசிரியர்களின் பாடநேரங்களை அதிகரித்து அவர்களை சுழற்சி முறையில் அழைப்பதே பொருத்தமானது. இதனை தாங்கள் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும், இந்த நடைமுறையானது பாடசாலை அதிபரின் நிர்வாக நடைமுறைக்கு உட்பட்டதாக நெகிழ்ச்சிப் போக்குடையதாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சகல மார்கங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

உணவுப்பஞ்சம், போக்குவரத்து நெருக்கடி, அன்றாட வாழ்க்கைக்கான துயரம் இவை அனைத்துமே மாணவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டில் உள்ள குழந்தைகளையும் பாதித்துள்ளது.

ஐந்து நாட்களும் ஆசிரியர்களை அழைப்பது சாத்தியமில்லை: இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் (VIDEO) | Teachers Sri Lanka Tamil Teachers Association

போதிய போசாக்கின்மையால் குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை மருத்துவத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இது அபாயகரமானது என்பதால் மாணவர்களின் மதியபோசனம் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கான போசாக்கு உணவு பாடசாலைகளில் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்” என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US