நாட்டில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள்
தேசிய மற்றும் மாகாண சபைப் பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, தேசியப் பாடசாலைகளின் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 4,484 ஆகும்.
மாகாண மட்டத்தில் காணப்படும் வெற்றிடங்கள்
மாகாண சபைப் பாடசாலைகளில், கிழக்கு மாகாணத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.அதாவது 6,613 ஆகும்.
மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 6,318, மேல் மாகாணத்தில் 4,630, தென் மாகாணத்தில் 2,513, வடமேற்கு மாகாணத்தில் 2,990, ஊவா மாகாணத்தில் 2,780, வட-மத்திய மாகாணத்தில் 1,568, சப்ரகமுவ மாகாணத்தில் 3,994, வடக்கு மாகாணத்தில், 3,271 ஆசிரியர் வெற்றிடங்கள் என்ற வகையில் காணப்படுகின்றன.

அத்தோடு 23,344 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எதிர்காலத்தில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.