அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டத்திற்கு மத்தியில் வழங்கப்பட்ட நியமனங்கள்..
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்பத்தியிருக்கும் சந்தர்ப்பத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பதினாறாயிரம் (16,000) பேர் ‘பிரஜா சக்தி’ திட்டத்தில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கிராமப்புற வறுமையை ஒழித்து சமூகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் கீழ் இவர்கள் கிராமப்புற அபிவிருத்தி பணியகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
எடுக்கப்பட்டுள்ள அடுத்தக் கட்ட நடவடிக்கை
அத்தோடு 14,013 கிராம அலுவலர் பிரிவுகளில் 10,177 ‘பிரஜா சக்தி’ திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதாவது 72.62 சதவீத சமூக அபிவிருத்தி மன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த சமூக மேம்பாட்டு மன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 56,097 பேர் இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்றுள்ளதாக பிரஜா சக்தி செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த மன்றங்கள் ஒவ்வொன்றிலும் 25 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் அதன் பணிக்குழுவில் தலைவர் மற்றும் நான்கு அரசு அதிகாரிகள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.

கிராமப்புற அபிவிருத்தி பணியகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த திட்டத்தில் முன்னணி பங்கு வகிக்கின்றனர்.
பிரஜா சக்தியின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களே ஒப்புதல் வழங்க வேண்டும் என கிராமப்புற அபிவிருத்தி பணியகம் வலியுறுத்தியுள்ளது.
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam