கிளிநொச்சியில் ஆசிரியர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஆசிரிய தொழிற்சங்க கூட்டணி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்திலேயே இன்றைய தினம் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் “சம்பளப் பிரச்சினையை நீக்கு, பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய், இலவச கல்வியை வியாபாரம் செய்யாதே, கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக ரத்து செய்” போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதில் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தினை சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
