ஆசிரியர்களின் இடமாற்ற போராட்டம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவரின் உறவினரின் இடம்மாற்றத்திற்காகவே அப்பாவி ஆசிரியர்களைக் கொண்டு போராட்டம் நடாத்துகின்றனர் என ஆசிரியர் சேவை சங்கத்தின் உபசெயலாளர் காராளசிங்கம் பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை இடமாற்றமானது வழமை போன்று இடம்பெற்றுள்ளது.
இடமாற்றம்
கடந்த வருடம் கிளிநொச்சியிலிருந்து மடு, மன்னார், துணுக்காய், முல்லைத்தீவு வலயங்களுக்கு சிலர் இடமாற்றமாகி சென்றிருக்கின்றனர்.
சிலர் என்று குறிப்பிடுவதற்கு காரணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனியே ஒன்பது ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அந்த ஒன்பது ஆசிரியர்களுக்கான இடம்மாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.
பலர் ஆசிரியர்கள் இவ்வாறு இருந்த போதும் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.
சைக்கிள் கட்சியுடன் செயற்படும் அந்த ஆசிரியர் சங்கம் வெளிமாவட்டம் செல்வதை தடுக்க வேண்டும் என்று நேற்றும் இன்றும் போராட்டம் செய்தனர்.இது கண்டிக்க தக்க விடயம்.
போராட்டம்
இடமாற்ற சபை உள்ளது அதனைவிட மேன்முறையீடு செய்யலாம் அதனை விடுத்து சாதாரண ஆசிரியருக்கு ஒரு சட்டமும் உறுப்பினரின் உறவினருக்கு ஒரு சட்டமுமாக காட்டுமிராண்டி தனமாக செயற்படுகின்றனர்.
பல வருடமாக தூர பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது அவர்களுக்கு கவலை இல்லையா. நாங்கள் அவர்களை மீட்க முயற்சிக்கின்றோம்.
இலங்கை ஆசிரியர் சங்கம் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் இந்ந சங்க போராட்டத்தில் அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலை ஆரம்பித்துள்ளனர்.போராட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.
ஆனால் இவர்களோ உறுப்பினரின் சகோதரிக்காகவே போராடுகின்றனர்.இதற்கு அரசியல் வாதிகளும் உடன்படுகின்றனரா என சந்தேகம் எழுகின்றது என தெரிவித்தார்.





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
