முள்ளியவளையில் தீக்கிரையாக்கப்பட்ட ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் மற்றும் வீடு
முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் வீடு இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் ஆசிரியர் தினத்திற்கு முன்னைய தினமான நேற்று (05.10.2024) இடம்பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து சக ஆசிரியர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாணவனுடன் முரண்பாடு
எனினும், ஆசிரியர் தங்கியிருந்த வீடு பகுதியளவில் எரிந்துள்ள அதேவேளை, அதி விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் பாவிக்க முடியாத வகையில் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.

முன்னதாக குறித்த ஆசிரியருக்கும் அவர் கற்பிக்கும் பாடசாலையை சேர்ந்த மாணவன் ஒருவருக்கும் முரண்பாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முரண்பாடு காரணமாக மாணவன் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்க முடியுமா..! 30 நிமிடங்கள் முன்
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam