பாடசாலை மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்! கிளிநொச்சியில் சம்பவம்
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீட்டுப்பாடம் செய்யாத மாணவன்
தனது துவிச்சக்கரவண்டியை தொலைத்த குறித்த மாணவன் கடந்தவாரம் மூன்று தினங்கள் பாடசாலைக்கு செல்லவில்லை.இந்த வாரம் அவர் பாடசாலைக்கு சென்றபோதிலும் கடந்த வாரம் வழங்கப்பட்ட வீட்டுப்பாடத்தையும் செய்யவில்லை.

வீட்டுப் பாடங்களை செய்யாமல் வந்ததற்கு தண்டனையாக ஆசிரியர், பெரிய தடி ஒன்றினால் மாணவனை தாக்கியதாகவும் இதனால் கையில் வீக்கமும் உடம்பில் உட்காயங்கள் ஏற்பட்டதன் காரணமாகவும் மகன் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை நிர்வாகத்திடம் முறைப்பாடு
இதன் காரணமாக மாணவன் தற்போது பாடசாலைக்கு செல்வதனை விரும்பவில்லை
என்றும், எனவே அவனை வேறு பாடசாலை ஒன்றில் இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பி்ல பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது
குறித்த சம்பவம் இடம்பெற்றதனை அவர்கள் உறுதிப்படுத்தியதோடு. இது
தொடர்பில் கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளரின்
கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri