ஆந்திர பிரதேச மாநில தேர்தலில் தெலுங்கு தேச கட்சி வெற்றி
ஆந்திர பிரதேசத்தில் முன்னாள் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சி சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் கடந்த மே 13ஆம் திகதி நடைபெற்ற முதலாம் கட்ட தேர்தலில், சட்டசபையுடன் சேர்த்து மக்களவை தேர்தலும் நடத்தப்பட்டது.
இதில் 25 மக்களவை தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கு சேர்த்து மொத்தம் 80.66 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
454 வேட்பாளர்கள்
மக்களவை தேர்தலில் 454 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என தேர்தல் இந்திய ஆணையம் தெரிவித்திருந்தது.
இதில், YSR கட்சி அனைத்து தொகுதிகளிலும்(25) போட்டியிட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 23 வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற தெலுங்கு தேச கட்சி 17 தொகுதிகளிலும், பா.ஜ.க. 6 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.
இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டது. எனினும், எவரும் எதிர்பாராத வகையில், இந்த தேர்தலில் தெலுங்கு தேச கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |