ஜனாதிபதியுடனான பேச்சை தமிழ்தேசிய கட்சி புறக்கணிக்க வேண்டும்: லவக்குமார் (video)
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லப் பகுதியை இராணுவ புலனாய்வு பிரிவு இராணுவம் ஒட்டுக்குழுக்கள் சூறையாடும் ஈனச்செயல் நடந்து கொண்டி ருக்கின்றது என தரவை மாவீரர் இல்ல ஏற்பாட்டுகுழு தலைவர் லவக்குமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (01.01.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்தேசிய கட்சிகள் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு தீர்வு கிடைத்தால் தான் பேச்சுவார்த்க்கு வருவோம் என ஜனாதிபதியிடம் தெரிவித்து பேச்சுவார்தையை புறக்கணிக்க வேண்டும்.
கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் 500 க்கு மேற்பட்ட குழிகளை வெட்டி மரக்கன்றுகளை நாட்டுவதாகவும் அதனை வனவள திணைக்களத்தினால் செய்யப்படுவதாக மாவீரர் எற்பாட்டுக குழுவான எனக்கும் நிதர்ஷன் ஆகியோருக்கு தொலைபேசி ஊடாக தெரிவிக்கப்பட்டது உடனடியாக வனவள திணைக்கள காரியாயத்திற்கு சென்றபோது அதனை நாங்கள் வெட்டவில்லை என்றனர்.
இதனையடுத்து நாங்கள் அங்கு உடனடியாக சென்றபோது இராணுவ புலனாய்வுபிரிவினரும் ஒட்டுக்குழுக்களும் மற்றும் பிள்ளையான் கடசியில் செயற்பாட்டில் இயங்குகின்ற கூளாவடியைச் சோந்தவர் இணைந்து இந்த குழிகளை வெட்டிக் கொண்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 21 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
