ஐஎம்எப் இன் பிடியில் சிக்கிய இலங்கை: அனுர எம்.பி குற்றச்சாட்டு
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததைப் போலவே, தற்போது இலங்கை சர்வதேச கண்காணிப்பு நிதியத்தின்(IMF) பிடியில் உள்ளது. இதன்படி, இலங்கைக்கு அதன் வரிவிதிப்பு அல்லது நிதிக் கொள்கைகளை தீர்மானிக்க சுதந்திரம் அல்லது இறையாண்மை இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய பிக்கு முன்னணி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், வரிவிதிப்பு, நிதிக் கொள்கைகள் போன்றவற்றின் அனைத்து முடிவுகளும் அமெரிக்காவின் தலையீட்டில் ஐ.எம்.எஃப் இன் தேவைக்கேற்ப செய்யப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்திற்கு பொது நிதி அதிகாரம் இருப்பதாக கூறப்பட்டாலும், இலங்கையில் வரிகளை சுமத்துவதற்கும், மாற்றுவதற்கும் மற்றும் நீக்குவதற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கு அதிகாரம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
வரி சுதந்திரம்
மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டு நாள் விவாதத்தை எதிர்க்கட்சிகள் கோரியபோது, அது சாத்தியமில்லை என்றும், விவாதம் இரண்டு நாட்களுக்கு நீடித்தால், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய காலக்கெடுவை பாதிக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார் .
இது, சட்டங்களை நடைமுறைப்படுத்துவதும், பொது நிதி மீதான கட்டுப்பாடும் இனி நாடாளுமன்றத்தின் கீழ் இல்லை என்பதை காட்டுகிறது என இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போதைய ஆட்சி காலனித்துவ ஆட்சிக்கு ஒத்ததாக இல்லையா? என்று அனுரகுமார கேள்வி எழுப்பியுள்ளார். எனவே மக்களின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கான புதிய போராட்டம் தற்போது தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்ட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
