வரி விதிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மக்கள் மீது தொடர்ந்தும் வரி சுமைகளை சுமத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான மூலோபாயங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
விசேட கலந்துரையாடல்
மேலும் தெரிவிக்கையில்,“ இந்த ஆண்டு மொத்த தேசிய வருமான இலக்கை அடைவதற்கு இன்னும் 100 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெற வேண்டியுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை (19.07.2023) ஜனாதிபதி செயலாளர் தலைமையில், துறைசார் நிபுணர்களை அழைத்து இது தொடர்பில் விசேட கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய வருமான வரி திணைக்களத்தினால் முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்படும்.”என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |