கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று முதல் ஆரம்பமாகும் செயற்பாடு
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினூடாக எந்தவொரு வாகனங்களுக்குமான வரிச் சிட்டைகள் வழங்குல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடைநிறுத்த செயற்பாடானது 27.09.2023 முதல் எதிர்வரும் 03.10.2023 வரையான காலப்பகுதியில், முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திடமிருந்து வாகனங்களுக்கான வரி செலுத்தி அதற்கான வரிச்சிட்டைகளை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் முடிவடையும் வரிச்சிட்டைகளுக்காக பொலிஸார் எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்காதிருக்குமாறு பிரதேச செயலகத்தினால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் பணியாளரொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இடைநிறுத்தப்படும் வரிச்சிட்டை
இலங்கையில் எந்தவொரு மாகாணத்திலும் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு வாகனத்திற்குமான வரிச்சிட்டைகளை நாட்டில் எந்தவொரு பிரதேச செயலகம் ஊடாகவும் பெற்றுக்கொள்ளும் வசதியினை வழங்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் திட்டமேம்பாட்டு கணிணியமைப்புப் பணிகளுக்காகவே இந்த தற்காலிக நிறுத்தம் மேற்கொள்ளப்படவதாக அறிய முடிகிறது.
இதுவரை காலமும் குறித்தவொரு மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கான வரிச்சிட்டைகளை அந்த அந்த மாகாணப் பிரிவுகளில் உள்ள பிரதேசம் செயலகம் ஊடாகவே பெற முடிந்துள்ளது.
எனினும் எதிர்வரும் 03.10.2023 முதல் நாட்டின் எந்தவொரு மாகாண குறியீட்டுடன் வரும் எந்தவொரு வாகனங்களுக்குமான வரிச்சிட்டைகளை முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் ஊடாக பெறமுடியும் என அறிவுறுத்தப்படுகின்றது.
இந்நிலையில், இடைநிறுத்தப்படும் வரிச்சிட்டைகளை வழங்கும் செயற்பாடு 03.10.2023 இன் பின்னர் புதிய பரிமாணங்களோடு சிறப்பான சேவையை தொடர ஆரம்பிக்கும் என கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பணியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ள பயங்கரவாதிகள்: இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி காட்டம் (Video)

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
